மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தார் பாலமுருகன் வேப்பங்குளம் கண்மாய் பகுதியில், நேற்று முன் தினம் சோதனை செய்த போது அரசு அனுமதியின்றி ஒரு டிராக்டரில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண் அள்ளப்படுவதை கண்டறிந்தார். இதனைப் பார்த்த டிராக்டர் டிரைவர் மண்ணை கொட்டி விட்டு டிராக்டர் உடன் மாயமானார். இதனையடுத்து மண் அள்ளும் இயந்திரத்தை தாசில்தார் பறிமுதல் செய்து, வன்னியம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். மண் அள்ளும் இயந்திர டிரைவர் கார்த்திக் 29, வன்னியம்பட்டி போலீசார் கைது செய்து, தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் கர்ணன், உரிமையாளர் ஆகியோரை தேடி வருகின்றனர்.