டூவீலர் மோதி முதியவர் பலி
சேத்துார்: சொக்கநாதன் புத்துாரை சேர்ந்தவர் கருப்பசாமி 55, மேலுார் துரைச்சாமிபுரத்தில் இருந்து ரோட்டில் நடந்து சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த அபிநவ் மோதியதில் பலத்த காயமடைந்து கருப்பசாமி உயிரிழந்தார். டூவீலரில் அபிநவ் உடன் வந்த மூன்று சிறுவர்களுக்கும் காயம் ஏற்பட்டு அனைவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.