தீயில் விழுந்து மூதாட்டி தற்கொலை
விருதுநகர்:விருதுநகர் அருகே லட்சுமி நகர் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் வேலுத்தாய் 67. இவருக்கு 4 ஆண்டுகளாக வயிற்றில் புற்றுநோய் பாதித்து மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வேதனையில் இருந்த அவர் நேற்று அதிகாலை 12:00 மணிக்கு வீட்டின் படுக்கை அறையில் மெத்தையை கிழித்து அதிலுள்ள பஞ்சை தீயிட்டு கொளுத்தி எரிந்த தீயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.