சாய்ந்த நிலையில் மின்கம்பம்
சாத்துார் : சாத்துார் -- வெம்பக்கோட்டை ரோட்டில் பந்துவார்பட்டி அருகே வயல்காட்டில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.சாத்துார் ஸ்ரீரங்கபுரம் புது சூரங்குடிவழியாக வெம்பக்கோட்டைக்கு செல்லும் ரோட்டில் அச்சங்குளத்தில் இருந்து பந்துவார்பட்டிக்கு செல்லும் ரோட்டின் ஓரத்தில் 2 மின் கம்பங்கள் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளன.இந்தப் பகுதி வயல்காடாக இருப்பதால் இந்தப் பகுதியில் மின்கம்பம் உள்ள இடத்தில் மணல் உறுதித்தன்மையின்றி மிருதுவாக காணப்படுகிறது. பந்துவார் பட்டி அச்சங்குளத்திற்கு இடையில் பட்டாசு ஆலைகளும், கடைகளும் உள்ளன. வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம், மழையில் விழுந்தால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரியத் துறையினர் சாய்ந்த நிலையில் உள்ள 2 மின்கம்பத்தையும் நேராக நிமிர்த்த வேண்டும்.