உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டில் மின்கம்பம்: வாகன ஓட்டிகள் சிரமம்

ரோட்டில் மின்கம்பம்: வாகன ஓட்டிகள் சிரமம்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் ரோட்டில் உள்ள மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரோட்டிலேயே மின்கம்பம் உள்ளது. மிகவும் குறுகிய ரோட்டில் மின்கம்பம் உள்ளதால் எதிரெதிரே வருகின்ற வாகனங்கள் விலகிச் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.சிறிது கவனம் சிதறினாலும் மின்கம்பத்தில் உரசும் நிலை ஏற்படுகிறது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இதே நிலைதான். எனவே இங்கு ரோட்டில் உள்ள மின் கம்பத்தை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத துாரத்தில் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ