உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியில் மின்கம்பத்தை உடைத்த யானை

ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியில் மின்கம்பத்தை உடைத்த யானை

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் புதிதாக அமைத்து வரும் மின்கம்பத்தை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. மின் இணைப்பு வழங்காததால் விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் இருந்து அணைத்தலை ஆறு கடந்து ராக்காச்சி அம்மன் கோயில் வரை மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ் திட்டத்தின் படி புதிதாக மின்கம்பம் மாற்றும் பணி 20 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் ராக்காச்சி அம்மன் கோயில் செக் போஸ்ட் முன்பு ஆற்றுப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டு வந்த புதிய மின்கம்பத்தை அப்பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானை உடைத்துள்ளது. புதிய மின்கம்பத்தில் தாங்கு கம்பிகள் அமைக்கப்பட்டு பணிகள் முழுமை அடையாததால் மின் கம்பம் அமைக்கவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயி பாலகுமாரன்: ஏற்கனவே இப்பகுதியில் கூட்டமாகவும் தனியாகவும் யானை விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது. தற்போது மின்கம்பத்தை சாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் அருகிலேயே உயர் மின்னழுத்த வழித்தடம் சென்று வரும் நிலையில் மின் கம்பிகள் அமைக்காத புதிய கம்பத்தை சேதப்படுத்தியதால் யானைக்கும் பாதிப்பில்லை. வனத்துறையினர் யானை உட்புகுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ