உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் தாக்கி ஊழியர் தீக்காயம்

மின்சாரம் தாக்கி ஊழியர் தீக்காயம்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் மின்வாரிய ஊழியர் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் தீக்காயமடைந்தார். தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியைச் சேர்ந்தவர் ரவி 34, ராஜபாளையம் மின்வாரியத்தில் கேங்மேனாக உள்ளார். நேற்று ஆவாரம்பட்டி பகுதியில் தனியார் ஆலையில் பீஸ் போடும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். முகம், தோள்பட்டை உள்ளிட்ட பகுதி 40 சதவீத தீக்காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ