உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நவ. 28ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்தார். அவரது செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்புத்துறையுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வழிகாட்டு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நவ. 28, சனிக்கிழமை, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் கார்டு, யு.டி.ஐ.டி., அட்டை, கல்வி சான்றுகள் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் வேலைவாயப்பை உருவாக்கிட வருகின்றன. எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம், இவ்வாறு அதில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !