உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் நிறைவு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் நிறைவு

ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்டத்தின் கீழ் பிளஸ் ஒன் மாணவர்களுக்கான பத்து நாள் உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவர்கள் கலந்து கொண்டனர். இயற்கை பற்றிய அறிவு, பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை முறை, பறவைகளின் வாழ்க்கை நிலைத்தன்மை, கழிவு மேலாண்மை, புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சியும் நேரடியாக சென்றும் விளக்க பயிற்சி நடந்தது.மாவட்ட நிர்வாகம், ராம்கோ சுற்றுச்சூழல் சங்கம், ரோர் அசோசியேஷன், பசுமை அறக்கட்டளை, ராஜூக்கள் கல்லுாரி இயற்கை மன்றம், கார்பன் நடுநிலை சங்கங்கள் உள்ளிட்டவை பங்கேற்றன. கல்லூரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன் நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை