உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இ. எஸ். ஐ. சி., கிளை அலுவலகம் திறப்பு

இ. எஸ். ஐ. சி., கிளை அலுவலகம் திறப்பு

சாத்துார்: சாத்துாரில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் ( இ.எஸ்.ஐ.சி.,)சாத்துார் கிளை அலுவலகம் வெம்பக்கோட்டை ரோட்டில் பி. எஸ். கே. வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது. மதுரை இணை இயக்குனர் ஆர். மீனாட்சி சுந்தரம் திறந்தார். பின்னர் நிரந்தர ஊனமுற்றோர் நல ஓய்வூதிய ஆணையை சக்கரவர்த்திக்கு வழங்கினார். கிளை மேலாளர் கிரண் நிவாஸ் சங்கர் கூறுகையில்,‘‘புதிய அலுவலகம் மேம்பட்ட வசதிகளுடன் செயல்பட தொடங்கி உள்ளதால் சாத்தூர் , சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த காப்பீட்டாளர்கள் ,பயனாளிகள் மேம்பட்ட சேவைகளை பெற்று பயனடையலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி