உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திட்டமிடாமல் நட்ட மரங்களை வேறு இடத்தில் நட எதிர்பார்ப்பு 

திட்டமிடாமல் நட்ட மரங்களை வேறு இடத்தில் நட எதிர்பார்ப்பு 

விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் ஓரங்களில் திட்டமிடாமல் நட்ட மரங்கள் மேலே செல்லும் மின் வயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அவை வளர வளர மின் ஊழியர்கள் வெட்டும் நிலை உள்ளது. இதனால் இந்த குறிப்பிட்ட பகுதியில் மரங்கள் நட்ட நோக்கம் பயனின்றி உள்ளது. இவற்றை வேறு இடங்களுக்கு மாற்றி நட வேண்டும்.விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் விளையாட்டு அரங்கம் வெளிப்புறத்தில் வரிசையாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகள் சருகுகளை எரிப்பதால் முதலில் பாதிக்கப்பட்டன. பிறகு அவற்றை மராமத்து செய்து கூண்டு அமைத்தனர். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக மரங்கள் வளர துவங்கியுள்ள நிலையில், அவற்றின் மேலே மின் வயர்கள் செல்வதால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவை வளர வளர மின் ஊழியர்கள் கிளை வெட்டி வருகின்றனர்.ஆனால் இம்மரங்கள் இதற்கு மேல் உயரே வளர வாய்ப்பில்லாத சூழல் தான் உள்ளது. காரணம், இவை அனைத்தும் வயர்களுக்கு நேராக நடப்பட்டுள்ளன. திட்டமிடல் எதுவுமின்றி நடப்பட்டுள்ள இம்மரங்கள் தொடர்ந்து இப்போது வெட்டப்பட்டு வளர்ச்சி தடைபட்டு வருகின்றன. நான்கு வழிச்சாலை ஓரங்களில் மரங்கள் நட்டதே ரோட்டின் இருபுறமும் பசுமையை ஏற்படுத்த தான்.இத்தகைய சூழலில் திட்டமிடாமல் நட்ட மரங்களை வெட்டி வருவது அதை நட்ட நோக்கத்தையே வீணாக்கி வருகிறது. இந்த இடத்தில் நடுவது சரிதானா. வேறு இடங்களில் இந்த மரக்கன்றுகளை மாற்றலாமா என தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ, வனத்துறையோ ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை