உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சஸ்பெண்ட் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க ... எதிர்பார்ப்பு: வேலை வாய்ப்பின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

சஸ்பெண்ட் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க ... எதிர்பார்ப்பு: வேலை வாய்ப்பின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு விதிமீறல்களால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் சிவகாசி,சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. 2025 தீபாவளிக்காக பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் பட்டாசுஆலைகளில் விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம், போலீசார், வருவாய்த்துறை தீயணைப்புத்துறை அடங்கிய ஆறு குழுக்கள் செயல்படுகிறது. இக்குழு ஆய்வு செய்து விதி மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்கிறது.அதன்படி 2024 தீபாவளியின் போது 50க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வீதி மீறி இயங்கியதாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. 2025 ஜனவரி முதல் நான்கு மாதங்களில் பட்டாசு ஆய்வு குழுவினர் இப்பகுதியில் விதிமீறி இயங்கியதாக 50க்கும் மேற்பட்ட ஆலைகளின் தற்காலிக உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து அதன்படி உரிமம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள் மீண்டும் இயங்குவதற்காக ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பித்தும் இதுவரையிலும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய பதிலும் இல்லாததால் ஆலை உரிமையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். விதிமீறல் காரணமாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படும் ஆலைகளுக்கு, மீண்டும் விதிக்கு உட்பட்டு செயல்பட தயாரான நிலையில் 42 நாட்களுக்குள் மீண்டும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கி வந்தது.ஆனால் ஒரு ஆண்டாக தற்காலிக உரிமம் ரத்துசெய்யப்படும் ஆலைகளுக்கு 10 மாதங்களுக்கும் மேலாக மீண்டும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள் மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜூலை 11, 2025 10:25

உரிமையாளர்கள் சங்கம் இந்திய அரசின் எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் செய்வதில்லை. பசுமை பட்டாசிற்கு மாறுவதும் கிடையாது. அரசின் சட்டதிட்டங்களை ஏற்டுக்கொள்வது கிடையாது. முதலில் ஜி எஸ் டி ஒருசில கம்பனிகள் தவிர எவருக்கும் கிடையாது அரசிற்கு வரி செலுத்துவதில்லை ஆனால் கறுப்புப்பணம் மட்டும் அவர்களுக்கு தேவை அதை நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் வேளையில் செலவழிகின்றகள் என்ற ரத்து நிலவுகிறது. எனவே பட்டாசு தொழிலை இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்


புதிய வீடியோ