உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடி, திருச்சுழிக்கு கூடுதல் பஸ் இயக்க எதிர்பார்ப்பு

நரிக்குடி, திருச்சுழிக்கு கூடுதல் பஸ் இயக்க எதிர்பார்ப்பு

காரியாபட்டி: நரிக்குடி, திருச்சுழியில் இருந்து காரியாபட்டிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் 3 மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். நரிக்குடியைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. பார்த்திபனூர் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ளதால் வெளியூர்களுக்கு செல்ல நரிக்குடி வந்து தான் செல்ல வேண்டும். பெரும்பாலான ஊர்களுக்கு நேரடியாக பஸ் வசதி உள்ளது.நரிக்குடி, திருச்சுழியில் இருந்து காரியாபட்டிக்கு வந்து செல்ல போதிய பஸ் வசதி கிடையாது. நரிக்குடியிலிருந்து காரியாபட்டிக்கு காலை 8:15, 11:15, மதியம் 2:15, மாலை 5:15, 6, இரவு 9:20க்கு பஸ் இயக்கப்படுகிறது. மதியம் 3 மணி நேரம் பஸ் இல்லாததால் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாலை நேர பஸ் வசதி இல்லாமல் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். அதேபோல் காரியாபட்டியில் இருந்து திருச்சுழிக்கு காலை 10:30 க்கு பின் மதியம் 12:30 க்கு பஸ் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ