உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் நகராட்சி நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு மீட்டெடுக்க எதிர்பார்ப்பு

விருதுநகரில் நகராட்சி நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு மீட்டெடுக்க எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலங்கள் தனிநபர், அமைப்புகள் பெயரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. விருதுநகர் கிருஷ்ணமாச்சாரி ரோடு, இங்குள்ள கவுசிகா ஆற்றின் கரை, அருப்புக்கோட்டை பாலத்தின் கீழ் பகுதி ஆகியவற்றில் தனி நபர்கள், அமைப்புகள் என்ற பெயரில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. முன்புஅகமது நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகல் நகராட்சிக்கு சொந்தமான நாய் வதை செய்யும் கூடம் இருந்தது. காலப் போக்கில் அவற்றைதனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதை மீட்க நகராட்சி அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாது இருந்து வருகின்றனர். இதேநிலை நீடித்தால் நகராட்சிக்கு சொந்தமான விலை மதிப்புமிக்க இடங்கள் தனி நபருக்கு சொந்தமாகும் நிலை உள்ளது. மேலும்கச்சேரி ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான லாரிகள் பார உந்து நிலையம் (நிறுத்துமிடம்) உள்ளது. அதில் பல தனி நபர்கள் கடைகள் வைத்துள்ளனர். இதற்கென வாடகையை கூட நகராட்சி நிர்வாகம் தற்போது வசூலிக்கவில்லை. நகராட்சிக்கு செல்ல வேண்டிய பணம், யாரிடம் செல்கிறது என்பது மர்மமாகவே உள்ளது. மேலும்ராமமூர்த்தி ரோட்டில்நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மைதானம் ஒன்றை தனியார் அமைப்பு கையில் வைத்துள்ளது. தற்போது வரை மின் இணைப்பு கமிஷனர் பெயரில் உள்ளது. அதை மீட்க நகராட்சி அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. அதேபோல் பழைய பஸ் ஸ்டாண்டின்உள்ளேயும், வெளியேயும் நகராட்சி அனுமதியின்றி பல கடைகள் உருவாகி உள்ளன. இதுகுறித்து நகரமைப்பு அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களின் மதிப்பே ரூ.300 கோடி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.எனவே விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான நிலங்களை உடனடியாக மீட்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !