அரசு பஸ்களில் பாடல்களுக்கு கெடு தனியாருக்கும் நடை முறைப்படுத்த எதிர்பார்ப்பு
ராஜபாளையம்: அரசு பஸ்களில் பயணிகளை பாதிக்கக்கூடிய அதிக ஒலியுடன் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போக்குவரத்து தொழில்நுட்பத்துறை தடை விதித்துள்ள நிலையில் தனியார் பஸ்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர்.தமிழ்நாட்டில் பஸ்களில் பயணிகளை பாதிக்கக்கூடிய அளவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பு செய்யப்படுவதும், சிலவற்றில் இரட்டை அர்த்த பாடல்கள், சாதி ரீதியிலான பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்ததால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான பாடல்களை ஒலிபரப்ப கூடாது என அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களில் இப்ப பிரச்னைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதும் தொடர்கிறது. எனவே அதிகாரிகள் தனியார் பஸ்களிலும் இதற்கான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பரசுராமன்: பஸ்களில் தேவையற்ற ஒலிச் சத்தத்தால் பிராயணம் செய்யும் நோயாளிகள், முதியவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தனியார் பஸ்களில் அளவு மீறிய சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களால் அலைபேசிகளில் உரையாடல்கள், அவசர தகவல்களையும் கூட பேச முடியாமல் பயணிகள் வேதனைக்கு உள்ளாகின்றனர்.எதிர்த்து கேட்டாலும் தீர்வு கிடைப்பதில்லை. அரசு பஸ்களில் நடைமுறைப்படுத்தவுள்ள இதை தனியாருக்கும் விரிவு படுத்த வேண்டும்.