உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பிரீமியம் செலுத்த கட்டாயப்படுத்தும் அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் அலட்சியம் விரக்தியில் விவசாயிகள்

 பிரீமியம் செலுத்த கட்டாயப்படுத்தும் அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் அலட்சியம் விரக்தியில் விவசாயிகள்

அருப்புக்கோட்டை: -: பிரீமியம் கட்ட விவசாயிகளை வற்புறுத்தும் அரசு இழப்பீடு நிவாரணம் வழங்குவதில் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். திருச்சுழி, நரிக்குடி, பரளச்சி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். உளுந்து, மிளகாய், பருத்தி, சோளம், கம்பு, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களுக்கு பிரீமியம் செலுத்தியுள்ளனர். பயிர்களுக்கு 3 ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தியும் காப்பீடு இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த ஆண்டும் காப்பீடு செய்துள்ளனர். ஒவ்வொரு பயிருக்கும் காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியத்தை அரசு விவசாயிகளுக்கு அறிவிக்கிறது பிரீமியம் கட்டுவதற்குரிய கடைசி தேதியையும் அறிவித்ததோடு கட்டாயப்படுத்தி பிரீமியம் கட்ட வற்புறுத்துகிறது. விவசாயிகளும் நம்பி காப்பீடு இழப்பீடு தொகை கிடைக்கும் என்ற எண்ணத்தில் காப்பீடு செய்கின்றனர். காப்பீடு செய்ய கடைசி தேதியை அறிவிக்கும் அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் மெத்தனமும் அலட்சியத்தையும் காட்டுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது. இதில் விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இழப்பீடு பணம் வழங்க அரசு தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ