உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தென்னை மரங்களை சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களை சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் வேதனை

ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், சேத்துார், சுந்தர்ராஜபுரம், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகளால் ஏற்படும் சேதம் இந்த ஆண்டு அதிகரித்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலை புரசம்பாறை கருப்பசாமி கோயில் அருகே தம்பாத்து ஊருணி சுற்றியுள்ள பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் தென்னை, மா, வாழை, பலா உள்ளிட்ட சாகுபடி நடந்து வருகிறது.நேற்று ராஜபாளையத்தை சேர்ந்த வடிவேல் உள்ளிட்டோரின் தோப்புக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும்குருத்துகளை முழுவதுமாக பிய்த்தும் சேதப்படுத்தியுள்ளது.இதனால் 25க்கும் அதிகமான தென்னை மரங்கள் பாதிப்பிற்கு உள்ளானதுடன் ஆண்டுக்கணக்கில் உரமிட்டு பாதுகாத்து வளர்த்த மரங்கள் ஒரே நாளில் அழிவை சந்தித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதி புதர்களில் பதுங்கி முகாமிட்டுள்ள யானை கூட்டம் மா, பலா பழங்களால் ஈர்க்கப்பட்டு இரவு நேரங்களில் மரங்களை சேதப்படுத்தி செல்கின்றன. வனத்துறை இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதுடன் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ