தீ விபத்து
சிவகாசி:சிவகாசி லட்சுமி நகரில் ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான ஏசி பழுது நீக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிறுவனம் அருகே பட்டாசு கடை உள்ளது. தீயை உடனடியாக அணைத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.