மேலும் செய்திகள்
சுய தொழில் தொடக்க நிதி திரட்டும் நிகழ்ச்சி
4 hour(s) ago
இன்று இனிதாக ... (03.12.2025) விருதுநகர்
4 hour(s) ago
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் பட்டாசு தயாரிக்க பயன்படும் காகித குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காகித குழாய்கள் எரிந்து நாசமாயின. திருத்தங்கல் முனியசாமி நகரில் ரமேஷ் என்பவரது ஸ்ரீ கார்த்திக் டியூப் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் காகித குழாய் தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு சுவாமி கும்பிடுவதற்காக ஏற்றி வைத்திருந்த குத்து விளக்கு தவறி கீழே விழுந்ததில் குவித்து வைக்கப்பட்டிருந்த காகிதங்களில் தீ பரவியது. வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்தில் ஏராளமான காகித குழாய்கள் எரிந்து நாசமாயின. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago