உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் மருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.மருத்துவமனை பணி முடிந்து ஊழியர்கள் வீட்டுக்கு சென்ற நிலையில் நேற்று இரவு 7:00 மணிக்கு மருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த ஊழியர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது ஏ.சி. மிஷன் பொருத்தப்பட்டிருந்த மின் பிளக் பாயிண்ட் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி