உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வைக்கோல் படப்பு எரிந்து நாசம்

வைக்கோல் படப்பு எரிந்து நாசம்

தளவாய்புரம், ஆக. 22-– தளவாய்புரம் அருகே வைக்கோல் படப்பில் தீ பற்றியதில் 9 படப்புகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் போராடி கட்டுப்படுத்தினர். தளவாய்புரம் அருகே அயன் கொல்லங் கொண்டானை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 56, விவசாயி. இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி வைத்திருக்கும் மாரியப்பன், அருள், கடுக்கனி உள்ளிட்டோர் நெற்களத்தில் கால்நடை தீவனத்திற்காக 15 வைக்கோல் படப்பு சேமித்து வைத்திருந்தனர். நேற்று மதியம் திடீரென தீப்பிடித்ததில் 9 வைக்கோல் படப்புகள் எரிந்து சேதமானது. ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை