உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆட்டு குடிலில் தீ விபத்து 6 வெள்ளாடுகள் பலி

ஆட்டு குடிலில் தீ விபத்து 6 வெள்ளாடுகள் பலி

சேத்துார்: தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த தங்கம்,கருப்பாயி தம்பதியினர் சேத்துார் தேவதானம் சாஸ்தா கோயில் செல்லும் வழியில் உள்ள ஓடை கரையில் குடில் அமைத்து தீபாவளிக்கு விற்பனை செய்யும் நோக்கில் கடந்த 10 மாதங்களாக ஆடுகளை வளர்த்து வந்தனர். இந்நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில் ஆட்டு குடிலுக்குள் தீ பற்றி எரிந்தது. இதில் உள்ளே இருந்த ஆறு ஆடுகள், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவிலர் என தீயில் சாம்பல் ஆனது. அருகில் மின் வயர் எதுவும் செல்லாத நிலையில் முன்விரோதம் காரணமாக தீவைப்பு சம்பவமா என்ற கோணத்தில் சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை