மேலும் செய்திகள்
பட்டாசு ஆலையில் விபத்து; மேலாளர் உடல் கருகி பலி
30-Aug-2025
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே கங்கர் செவல்பட்டி திவ்யா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு அறைகள் சேதமடைந்தது. மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கவுரி 50, காளிமுத்து 35, பலியாயினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q3d1k80q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிவகாசியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான திவ்யா பட்டாசு ஆலை கங்கர் செவல்பட்டியில் செயல்படுகிறது. நாக்பூர் லைசென்ஸ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் சீனி வெடி, குருவி வெடி, பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று மதியம் 1:40 மணிக்கு தொழிலாளர்கள் உணவு அருந்தி விட்டு பணிக்கு திரும்பி சீனி வெடி பட்டாசுக்கு மருந்து செலுத்தினர். அப்போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு அறைகள் சேதமடைந்தன. மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கவுரி சம்பவ இடத்திலும், மண்குண்டாம்பட்டி காளிமுத்து சிவகாசி அரசு மருத்துவமனையிலும் பலியானார். மேலும் கண்டியாபுரம் மேகலா 21, குமரேசன் 30, சிவரஞ்சனி 39, சுப்புலட்சுமி 55, எழுவன்பச்சேரி ஜெயலட்சுமி 60, மாரனேரி மாரியம்மாள் 40, மகேஸ்வரி 42, ஆகியோர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெம்பக்கோட்டை, சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பலத்த மழை பெய்த போதும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். போர்மேன் சோமசுந்தரம் 50, என்பவரிடம் ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட்ட டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தார். விபத்தில் உயிரி ழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு, நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஐந்து பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
30-Aug-2025