பட்டாசு உற்பத்தி --இருவர் மீது வழக்கு
ராஜபாளையம், செப். 27- ராஜபாளையம் ஜானகிராம்மில் பஸ் ஸ்டாப் அருகே ் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்ததை ஆர்.ஐ மாரிவாசுகி தலைமையிலான வருவாய்த் துறையினர் கண்டறிந்துனர். சிவகாசி பாரதிநகரை சேர்ந்த ஜான்சன் சாமுவேல், எம். புதுப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் கூறியதன் பேரில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவது தெரிந்தது. அங்கிருந்து தடை செய்யப்பட்ட பேப்பர் வெடி, பட்டாசுகள், 10 கிலோ கரி மருந்து, வெடி மருந்து கலவை 6 கிலோ, வெடி உப்பு 10 கிலோ உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., புகாரில் ஜான்சன் சாமுவேல், ஸ்ரீதர் மீது வடக்கு போலீசார் வடக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.