உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனையில் பாத மருத்துவ மையம் திறப்பு

அரசு மருத்துவமனையில் பாத மருத்துவ மையம் திறப்பு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் 2வது மாடி சர்க்கரை நோய் பிரிவில் பாத மருத்துவ மையம் திறப்பு விழா நடந்தது. டீன் ஜெயசிங் திறந்து வைத்தார்.சர்க்கரை பாத நோய் வருவதற்கு முன்பாகவே கண்டறியும் பயோதெசியோமீட்டர் முறையைநோயாளியை வைத்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பாத நோய் வந்த பின்பு கால்களை நன்றாக சுத்தம் செய்தல், மருந்து கட்டுதல் போன்ற செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இதுவரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் பாத நோய்க்கு கால் இழப்பு ஏற்படாத வகையில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கால்கள் காப்பாற்றப்பட்டதாகவும், நோயாளிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, துணை கண்காணிப்பாளர் அன்புவேல், நிலைய மருத்துவர் ஸ்ரீதரன், பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் லதா, பாத மருத்துவ மைய நோடல் அலுவலர் சிவசுப்பிரமணியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை