உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொடங்கிய வாறுகால் தரைப்பாலப்பணி

தொடங்கிய வாறுகால் தரைப்பாலப்பணி

ராஜபாளையம், : ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாக்கடை பணிக்காக தோண்டியதில் ஏற்பட்ட தாமதம் குறித்து படத்துடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால் அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.ராஜபாளையம் நகராட்சி 15வது வார்டு காமராஜர் சிலை பின்புறம் நான்கு முக்கு ரோட்டில் வாறுகால் தரைப்பால பணிக்காக தோண்டப்பட்டு தாமதம் ஏற்பட்டு வந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல வழியின்றி குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டனர். இது குறித்து படத்துடன் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இணைப்பு துண்டான குடிநீர் குழாய்கள் முதல் கட்டமாக சீரமைப்பு பணிகள் முடிந்தன. கழிவு நீருடன் குடிநீர் சப்ளை தொடர்கிறதா என்ற ஆய்வு நடந்தது.இதனை அடுத்து தரைப்பாலம் கீழ்பகுதியில் கழிவுநீர் வெளியேற்றி வாறுகால் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அடுத்த கட்டமாக தரைபாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செய்தி வெளியிட்டு பணிகள் விரைவு படுத்தியதற்கு இப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ