காட்டுப்பன்றி தொல்லை முன்னாள் எம்.எல்.ஏ., புகார்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் மல்லி, பண்டிதன்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, அச்சம்தவிர்தான், நாச்சியார்பட்டி, அத்திகுளம், மல்லிபுதூர், மானகசேரி, அச்சங்குளம், அணைத்தலைபட்டி கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இதனை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டுபன்றிகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்துார் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திர பிரபா, முத்தையா, விவசாயிகள் வனச்சரகர் செல்லமணி புகார் மனு அளித்தனர்.