திருச்சுழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழா
திருச்சுழி: திருச்சுழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.திருச்சுழியில் பல ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் 5.60 கோடி நிதியில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், திட்ட இயக்குனர் தண்டபாணி, உதவி செயற்பொறியாளர் அனிதா கலந்து கொண்டனர்.