உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புது பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழா

புது பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழா

சாத்துார்: சாத்துாரில் புதிய பஸ் ஸ்டாண்டுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழாவிலும் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.சாத்துார் வெம்பக்கோட்டை ரோட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.79 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். மேல காந்தி நகரில் ரூ.86 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நகராட்சி துவக்க பள்ளிக்கான கட்டடத்தை அமைச்சர் திறந்தார். ஆர்.டி.ஓ சிவக்குமார், தாசில்தார் ராஜாமணி, கமிஷனர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி