மேலும் செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் மூங்கிலால் தடுப்பு அமைப்பு
31-Jan-2025
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலை ஓர தடுப்பு பெயர்ந்து கிடப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி வழியாக மதுரை துாத்துக்குடி நான்கு வழி சாலை செல்கிறது. ராமசாமிபுரம் சந்திப்பு பாலம் அருகில் உள்ள வளைவில் இரும்பிலான தடுப்புச் போடப்பட்டுள்ளது. ரோடு அருகில் பள்ளமாகவும், வளைவு பகுதியாக இருப்பதாலும் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் இருக்க இந்த தடுப்பு பாதுகாப்பாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு வளைவு பகுதியில் உள்ள தடுப்பு வாகன விபத்தினால் பெயர்ந்ததால், பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது தடுப்பு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.
31-Jan-2025