உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பவுர்ணமி சிறப்பு வழிபாடு

பவுர்ணமி சிறப்பு வழிபாடு

காரியாபட்டி : காரியாபட்டி கணக்கனேந்தல் சுயம்பு நாகாத்தம்மாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு, நாகம்மாள், சிவன், சூலாயுத அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், குங்குமம், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புத்துக்கோயிலின் சிறப்புகளை பற்றிய புதிய பக்தி பாடல் இசை வெளியீட்டு விழா நடந்தது. திரைப்பட தயாரிப்பாளர் சவுத்ரி, கல்லூரி நிறுவனர் நாகரத்தினம், எஸ். எப். ஆர். பி.சி., தென்மண்டல தலைவர் சரவணா, ஏ.வி.எம்., ஏஜன்சி உரிமையாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ