உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்விளக்குகள் எரியாத காந்திநகர் மேம்பாலம் விபத்துக்கு வாய்ப்பு

மின்விளக்குகள் எரியாத காந்திநகர் மேம்பாலம் விபத்துக்கு வாய்ப்பு

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை காந்தி நகர் மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அருப்புக்கோட்டை காந்திநகர் சந்திப்பு வழியாக செல்லும் மதுரை - - துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் உள்ளது. சென்னை, மதுரை உட்பட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் கனரக வாகனங்கள் பாலத்தை கடந்து துாத்துக்குடி, பிற ஊர்களுக்குச் செல்லும். பகல், இரவு எந்த நேரத்திலும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்தப் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் பாலம் இருட்டாக உள்ளது. பாலத்தில் டூவீலர்களில் செல்வோர்களும் அதிகம் உள்ளனர்.இரவு நேரங்களில் செல்கிற போது கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பாலத்தின் கீழ் பகுதியில் சந்திப்பில் உள்ள ஹைமாஸ் விளக்குகளும் பழுதாகி அந்தப் பகுதி முழுவதும் இருட்டாக உள்ளது.பாலத்தை இரவு நேரங்களில் கடக்கும் போது திருட்டு பயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. பாலத்தை பராமரிக்கும் நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் காந்திநகர் சந்திப்பில் ஹைமாஸ் விளக்குகள், பாலத்தில் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ