உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழா பந்தலுக்கு வந்த விநாயகர் சிலைகள்

விழா பந்தலுக்கு வந்த விநாயகர் சிலைகள்

ராஜபாளையம்; ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பணிகள் முடிந்த விநாயகர் சிலைகள் விழா பந்தலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மாயூரநாதசுவாமி கோயில் முன்பு சிலைகள் தயாரிப்பு பணி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள அலங்கார பந்தலில் நேற்று மாலை 5:30 மணிக்கு மேல் பொருள் அருளும் கணபதி, மங்கள கணபதி, விஜய கணபதி, சயன கணபதி, ஆனந்த கணபதி, மிர்த்தன கணபதி ஆகிய விநாயகர் சிலைகள் மக்கள் பார்வைக்காக டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை