உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி பிசிண்டி காலனியில் தேங்கியுள்ள குப்பை

காரியாபட்டி பிசிண்டி காலனியில் தேங்கியுள்ள குப்பை

காரியாபட்டி: காரியாபட்டி பிசிண்டி காலனியில் பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் குப்பையாக தேங்கி கிடப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய்ஏற்படும் அபாயம் உள்ளது. காரியாபட்டி பிசிண்டியில் கழிவு நீர் வெளியேற வாறுகால் வசதி செய்யப்பட்டது. குண்டாற்றில் கழிவு நீரை கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வாறுகால் காலனியை ஒட்டியே கடந்து செல்கிறது. ஊருக்குள் வீசப்படும் பிளாஸ்டிக், பாலிதீன், கேரி பை உள்ளிட்ட கழிவு பொருட்கள் கழிவு நீரில் மிதந்து வருகின்றன. காலனி அருகே கழிவு நீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்பதால், குப்பைகள் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கின்றன. சுகாதாரத் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டி பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கையும் இல்லை. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிப்பதுடன், உடலில் தடிப்பு ஏற்படுவதாக புலம்பி வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் தேங்கி கிடக்கும் குப்பை கழிவு பொருட்களை அப்புறப்படுத்தி, கழிவு நீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை