உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பழைய அலுவலகத்தில் குவிந்துள்ள குப்பை

பழைய அலுவலகத்தில் குவிந்துள்ள குப்பை

விருதுநகர் : விருதுநகரில் பழைய கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் குப்பை தேங்கி கிடக்கிறது. இதில்இருந்து வீசும் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவ்வழியாக சென்று வரும் அரசு அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.விருதுநகரில் புதிய கலெக்டர் அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்ததால் பழைய கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்ட பல்வேறு துறைகள்இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது பழைய கலெக்டர் அலுவலகத்தில்எம்.பி., அலுவலகம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.தரைத்தளத்தில் குப்பை முறையாக அகற்றப்படாமல் தரைதளத்தில் தேங்கி கிடக்கிறது. ஏற்கனவே இப்பகுதியில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே பழைய கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ