உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி செவல்பட்டி ஊருணியில் தேங்கும் கழிவு நீரால் முகம் சுளிப்பு; கழிவு நீரை வெளியேற்ற எதிர்பார்ப்பு

காரியாபட்டி செவல்பட்டி ஊருணியில் தேங்கும் கழிவு நீரால் முகம் சுளிப்பு; கழிவு நீரை வெளியேற்ற எதிர்பார்ப்பு

காரியாபட்டி: காரியாபட்டி செவல்பட்டி ஊருணியில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செவல்பட்டி ஊருணியில் தேங்குகிறது. ஊருணி குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அப்பகுதி குடியிருப்பு வாசிகளை முகம் சுளிக்க வைக்கிறது.புழு, பூச்சிகள் உண்டாகி குடியிருப்புகளுக்குள் ஊர்ந்து செல்கிறது. அருகில் கோர்ட் வளாகம் உள்ளது.அங்கு வருபவர்கள் துர்நாற்றத்தால் அப்பகுதியில் உட்கார முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.கழிவுநீரை அப்புறப்படுத்தி சுற்றுச் சுவர் எழுப்பி படித்துறை கட்ட டெண்டர் விடப்பட்டது. இதுவரை பணிகள் நடைபெறவில்லை. காலதாமதம் ஏற்படுவதால் நிதி திரும்ப பெறப்படும் சூழ்நிலை உள்ளது. அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு கழிவு நீரை அப்புறப்படுத்தி, சுற்றுச் சுவர் எழுப்பி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ