பொதுக்குழு கூட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெகநாத ராஜா வரவேற்றார். பொருளாளர் ஜெகத்சங்கர் முன்னிலை வகித்தார்., செயலாளர் விஜய் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் ஈரோடு- -கொல்லம் ரயிலை தினசரி நிரந்தர ரயிலாக்குதல், பெங்களூருக்கு இரவு நேர தினசரி ரயில், சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயில், ராஜபாளையம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இணை செயலாளர் ஹரிசங்கர் நன்றி கூறினார்.