உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கிப்ட் பெட்டிகள் பறிமுதல்

 கிப்ட் பெட்டிகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக அலுவலகம் முன்பு நேற்று மாலை 4:20 மணிக்கு தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூமாரி தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை செய்த போது தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு கண்டெய்னர் லாரியில் உரிய ஆவணங்கள், விற்பனை பில்கள் இல்லாமல் இருந்த 96 கிப்ட் பாக்ஸ்கள் இருந்த 2 அட்டைபெட்டிகளை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். உதவி தேர்தல் அலுவலர் பாலமுருகனின் விசாரணைக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்துார் சார்நிலை கருவூலத்தில் அட்டைப்பெட்டிகளை பறக்கும் படை குழுவினர் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !