உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

விருதுநகர், : அரசு விதிகளுக்கு மாறாக அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை செல்ல தனியார் பஸ்களில் ரூ.40 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தி வசூல் செய்வதை தடுத்து நிறுத்த அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை செல்ல அரசு ஆணைப் படி ரூ.37 பஸ்களில் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். அரசாணை வந்தபோது அரசு, தனியார் பஸ்களில் ரூ.37 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு பின் சில்லறைப் பிரச்சனை என்று கூறி ரூ.37க்கு பதிலாக ரூ.40 என உயர்த்தி தனியார் பஸ்கள் வசூலித்து வந்தன.அரசுப் பஸ்களில் இன்றும் ரூ.37 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 நாட்களாக தனியார் பஸ்களில் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை செல்ல ரூ.40க்கு பதிலாக ரூ.50 ம், காரியாபட்டி முக்கு ரோட்டிலிருந்து ரூ.30க்கு பதிலாக ரூ 40ம், காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து ரூ.28க்கு பதிலாக ரூ.35ம் பஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் கூறியதாவது: அருப்புக் கோட்டையில் இருந்து விருதுநகர் செல்ல தனியார் பஸ்களில் ரூ.16க்கு பதில் ரூ.18 வசூலிக்கின்றனர் என முன்பு நடவடிக்கை எடுக்க கோரியிருந்தோம்.மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதால் தற்போதுகட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளனர். எலியார்பத்தி டோல்கேட்டில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், பஸ் கட்டணத்தை உயர்த்தியதாக தெரிகிறது. டோல்கேட் உயர்வால் உரிமையாளர்களுக்கு சிரமம் என்றால் அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் முறையீடு செய்து தீர்வு காண வேண்டும். அதை விட்டுவிட்டு தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல. பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கும், உயர்த்துவதற்கும் தமிழக அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு. எனவே கட்டண உயர்வோடு வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இதை கண்டித்து அக். 14ல் காரியாபட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், என கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி