உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியை கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்த உத்தரவு

அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியை கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்த உத்தரவு

சிவகாசி: சிவகாசி அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியை கல்லுாரி மாணவர் விடுதியாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகாசி சாட்சியாபுரத்தில் சொந்த கட்டடத்தில் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டடத்தில் கல்லுாரி மாணவர் விடுதி செயல்படுவதால், மாணவர் விடுதி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் போதிய மாணவர்கள் இல்லை என்ற புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரவில் மாணவர்கள் தங்குவதில்லை என்பது உறுதியானதை அடுத்து சிவகாசி பள்ளி மாணவர் விடுதி உட்பட மாவட்டத்தில் 35 ஆதிதிராவிடர் நல விடுதிகளை மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதில் 4 பள்ளி விடுதிகள் கல்லுாரி விடுதிகளாக தரம் உயர்த்த ஆதிதிராவிடர் நலத்துறை ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிவகாசி பள்ளி மாணவர் விடுதியை தற்காலிகமாக கல்லுாரி மாணவர் விடுதியாக தரம் உயர்த்த ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. 50 மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்த விடுதியில், 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே, நிரந்தர கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்தப்படும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை