அரசு டவுன் பஸ் ட்ரிப் கட் பயணிகள் சிரமம்
நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறைக்கு 2 முறை இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பஸ் ஒரு 'ட்ரிப் கட்' ஆனதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.நரிக்குடி இருஞ்சிறையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பல்வேறு தேவைகளுக்காக நரிக்குடி சென்று தான் மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். நரிக்குடியில் இருந்து இருஞ்சிறைக்கு காலை, மாலை என இரு முறை தேளி வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் மாலையில் இயங்கிய டவுன் பஸ் 'ட்ரிப் கட்' செய்யப்பட்டது. காலையில் மட்டுமே வந்து செல்கிறது. மற்ற நேரங்களில், 3 கி.மீ., நடந்து மெயின் ரோட்டிற்கு வந்து வேறு பஸ் பிடித்து நரிக்குடி உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் வேறு திறக்கவுள்ளது. எனவே இருஞ்சிறைக்கு தேளி வழியாக இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்சை உரிய நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.