உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தண்டியனேந்தலில் 2வது முறையாக கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி

தண்டியனேந்தலில் 2வது முறையாக கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி

காரியாபட்டி : குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி காரியாபட்டி தண்டியனேந்தல் கிராம சபை கூட்டத்தை 2வது முறையாக மக்கள் புறக்கணித்தனர். தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். காரியாபட்டி தண்டியனேந்தல் அருகே குவாரி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆக.15ல் கூட்டப்பட்ட கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து, தற்காலிகமாக உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அக்கிராமத்தினர் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் திரண்டு, ஆக. 15ல் நடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பின், மாற்று கிராம சபை கூட்டம் ஏன் நடத்தவில்லை. இந்த கூட்டத்திற்கு மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றால், குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், வழக்கு வாபஸ் பெற வேண்டும், என்றனர். அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என ஊராட்சி செயலர் தெரிவித்ததால், 2வது முறையாக கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர். தீர்மானம் ஏதும் நிறைவேற்ற முடியாமல் திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி