குட்கா பதுக்கல்;ரூ.4. 25 லட்சம் அபராதம்
குட்கா பதுக்கல்; ரூ.4. 25 லட்சம் அபராதம்விருதுநகர்: விருதுநகர் நகராட்சி, அதனை சுற்றிய பகுதிகளில் தடை புகையிலை பதுக்கல், விற்பனையை கண்டறிய உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் கடந்த மூன்று மாதங்களில் இரு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 15 வாகனங்களுக்கு ரூ. 4. 25 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.தற்கொலைசாத்துார்: சாத்துார் மேட்டமலையை சேர்ந்தவர் கருப்பசாமி, 23. கொத்தனார். சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த பூமாரியை 22. 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இருவரிடையே மார்ச் 25ல் லோன் வாங்குவது குறித்து ஏற்பட்ட தகராறில் மனைவி பூமாரி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை கருப்பசாமி வீட்டில் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளி தற்கொலைசிவகாசி: சிவகாசி புதுக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் பூமாரி 25. இவரது மனைவி புவனேஸ்வரி 23. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். . தம்பதியினர் மகளிர் சுய உதவி குழுவில் லோன் வாங்கியுள்ளனர். இதனை சரியான நேரத்தில் கட்ட முடியவில்லை. இந்நிலையில் பூமாரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.