மேலும் செய்திகள்
கட்டியும் திறக்காத சுகாதார வளாகம், ரேஷன் கடை
29-Apr-2025
ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே ரூ.9.5 லட்சம் செலவில் டாஸ்மாக் எதிரே அமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் 2 ஆண்டுகள் கடந்தும் திறப்பு விழா காணாமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதுடன் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வெங்கா நல்லுார் ஊராட்சி சஞ்சீவி மலை அருகே இ.எஸ்.ஐ., காலனி, இந்திரா நகர், லீலாவதி நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி போதிய தனிநபர் கழிப்பறை வசதி இன்றி கண்மாய், சஞ்சீவி மலை அடிவாரம் போன்றவற்றையே திறந்த வெளியாக பயன்படுத்தினர். 15 வது நிதி குழு மானியத்தில் ரூ. 9.50 லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதன் எதிரே கண்மாயை ஒட்டி டாஸ்மாக் கடை உள்ளதால் தனியாக வரும் இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தொடக்கம் முதலே இப்பகுதியினரிடையே எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் பணிகளை தொடங்கி முடித்து ஒப்படைத்து விட்டனர். ஏற்கனவே ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமாக உள்ளதால் இதன் அருகே குடிமகன்கள் போதையில் விழுந்து கிடப்பதும் பல்வேறு பகுதியிலிருந்து புதிய நபர்கள் வந்து செல்வதாலும் பெண்கள் இதை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். இதுகுறித்து மகேந்திரன்: டாஸ்மாக் கடைக்கு எதிரே குடியிருப்புகளுக்கு வெகு தொலைவு சுகாதார வளாகத்தை அமைத்துள்ளனர். ரூ.9.5 லட்சம் செலவழித்தும் திறக்க முடியாமல் மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.
29-Apr-2025