உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உயர்மட்ட பால அடிக்கல் நாட்டு விழா

உயர்மட்ட பால அடிக்கல் நாட்டு விழா

நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் முதுகுளத்துார் வீரசோழன் ரோட்டில் உள்ள தரைப் பாலத்தை மாற்றி, புதிய உயர்மட்ட பாலம் கட்ட கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது: ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து பார்த்திபனூரை இணைக்கக்கூடிய இந்த ரோடு, நான்கு வழிச்சாலையாக உயர்த்த வேண்டி உள்ளது. தற்போது சிவகாசி - அருப்புக்கோட்டை வரை பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகள் செய்கிற போது ராமேஸ்வரம் வரை நான்கு வழிச்சாலை பயணமாக அமைக்க வேண்டி இருக்கிறது. மதுரையில் -கொச்சின், -கன்னியாகுமரி, -துாத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய நான்கு வழிச்சாலைகளையும் இணைக்க கூடியதாக இருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ