உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உயருது முண்டு, நாடு வத்தல்குறையுது துவரம் பருப்பு விலை

உயருது முண்டு, நாடு வத்தல்குறையுது துவரம் பருப்பு விலை

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ.4000 உயர்ந்து ரூ.16,000 முதல் ரூ.20,000, வத்தல் நாடு 100 கிலோவிற்கு ரூ. 2000 உயர்ந்து ரூ.12,000 முதல் ரூ.14,000, துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ. 10,400 முதல் ரூ. 10,600 என விற்கப்படுகிறது. இங்கு க.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.2600, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.5940, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.10 உயர்ந்து ரூ.2000, மைதா 90 கிலோ ரூ.4670, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.2210, ரவை 30 கிலோ ரூ.1540, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4650, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.7000 என விற்கப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.150 குறைந்து ரூ. 9,350, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.9100, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 50 குறைந்து ரூ. 9450 முதல் ரூ. 9550, உளுந்து லயன் 100 கிலோ ரூ. 7900 முதல் ரூ. 8100 உளுந்து நாடு 100 கிலோ ரூ.7200 முதல் ரூ.7400, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.4200 முதல் ரூ.4300, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ரூ.7200 முதல் ரூ.7600 என விற்பனை செய்யப்படுகிறது. மல்லி லயன் 40 கிலோ ரூ.3550 முதல் ரூ.3700, மல்லி நாடு ரூ.3500 முதல் ரூ.4300, குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ.1500 உயர்ந்து ரூ.13,500 முதல் ரூ.14,500, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.4500, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.1800 என விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ