மேலும் செய்திகள்
திருவாலங்காடில் 11 செ.மீ., மழை பதிவு
27-Sep-2024
சாத்துார் : தாயில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையில் ஓட்டு வீடு இடிந்தது.தாயில்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி மாரீஸ்வரி, 50. இவருக்கு 5 ஐந்து குழந்தைகள் உள்ளனர். நான்கு பேர் திருமணம் முடிந்து சென்று விட்டனர். ஒரு ஆண் மகனுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் தாயில்பட்டியில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையில் வீட்டின் மண் சுவர் மழையில் கரைந்து வெளிப்புறமாக இடிந்தது. யாரும் காயமடையவில்லை. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Sep-2024