மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் கிளை சிறை, மல்லி அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தமிழக மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று நேரடி ஆய்வு செய்தார்.சிறைவாசிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ஜாமீன் கிடைத்தும் வெளிவர முடியாதவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். சமையல் கூடத்தை பார்வையிட்டு உணவின் தரத்தை பரிசோதித்தார். பின் மல்லிபுதூர் அரசினர் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று ஆசிரியர்கள் மாணவர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.* ராஜபாளையம் அய்யனார் கோயில் மலை அடிவாரத்தில் வசிக்கும் பழங்குடியினரிடம் குறைகளை கேட்டறிந்த பின் கூறுகையில், 35 ஆண்டுகளாக வாழ்விடத்திற்காக போராடி வருவது தெரிகிறது. இடப்பற்றாக்குறையால் தற்காலிக பிளாஸ்டிக் செட்டுகள் அமைத்து வசிக்கின்றனர். ஏற்கனவே உள்ள குடியிருப்பை பராமரிக்க வனத்துறை சார்பில் ஆட்சேபம் உள்ளது. தீர்வு காணப்படும், என்றார்.