உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மவுன விரத மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது

மவுன விரத மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது

விருதுநகர் : விருதுநகரில் மவுன விரதமிருந்த மனைவி அபிராமியை 32, கத்தியால் குத்திய கணவர் கார்த்திக்கை 39, மேற்கு போலீசார் கைது செய்தனர் விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு பாரதி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அபிராமி, திங்கள் தோறும் மவுன விரதமிருப்பது வழக்கம். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வீடு திரும்பிய கார்த்திக், தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதற்கு மவுனம் விரதம் என்பதால் பதில் பேசாத மனைவியை அடித்து கத்தியால் பின் தலையில் குத்தியதில் காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றார். கணவர் கார்த்திக் மேற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை