உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனைவிக்கு கத்திக்குத்து கணவனுக்கு 10 ஆண்டு சிறை

மனைவிக்கு கத்திக்குத்து கணவனுக்கு 10 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார், : சாத்தூர் அருகே குடித்துவிட்டு அடித்து தொல்லை கொடுக்கும் கணவன் மீது போலீசில் புகார் கொடுக்கப் போவதாக கூறிய மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சாத்தூர் தாலுகா அச்சங்குளத்தை சேர்ந்தவர் டென்னிசன் 34, கூலி தொழிலாளி. இவரது மனைவி மலர் 30, குடி போதைக்கு அடிமையான டென்னிசன் அடிக்கடி கொடுத்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இது குறித்து போலீசில் புகார் கொடுக்க போவதாக மனைவி மலர் கூறி வந்த நிலையில், 2019 பிப்ரவரி 7 அன்று அவரை கணவர் டென்னிசன் கத்தியால் குத்தியுள்ளார். ஏழாயிரம்பண்ணை போலீசார் அவரை கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இது டென்னிசனுக்கு 10 ஆண்டு சிறையும், ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !